Saturday, January 06, 2007

இந்திய கிரிக்கெட் - சொந்தச் செலவில் சூன்யம்

இந்திய-தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 3-வது டெஸ்டின் நான்காம் நாள், இந்தியா ஆடிய மட்டரக கிரிக்கெட்டைப் பார்க்கும் துர்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டது. சொந்தச் செலவில் சூன்யம் என்பது இது தானோ ??? அனுபவமும், திறமையும் உள்ள அணி வீரர்கள் கடைபிடித்த கேவலமான அணுகுமுறை, இந்த டெஸ்டில் தோல்வி அடையும் நிலைக்கு இந்தியாவை தள்ளி விட்டது ! இந்தியா செய்த தவறுகளும் முட்டாள்தனங்களும் ஏராளம்.

1. முதல் இன்னிங்க்ஸில் திறமையாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்காமல், 'Out of Form' சேவாக்-ஐ முதலில் ஆட அனுப்பியதில், இந்தியாவுக்கு 6/2 என்று உடனடியாக பின்னடைவு ஏற்பட்டது.

2. சச்சின் ஆடிய ஆட்டம், அபத்தத்தின் உச்சம் ! இத்தனை சாதனைகளைப் படைத்தவர், கிரிக்கெட் அறிவு மிக்கவர் என்று போற்றப்படும் ஒருவர், ஆட்டத்திலிருந்தே சீக்கிரம் ஓய்வு பெற மாட்டாரா என்ற ஆதங்கம் தோன்றும் வகையில், மிக மோசமாக விளையாடினார் !

3. தனது முதல் டெஸ்டில் விளையாடும் 'சின்னப்பையன்' ஹாரிஸ¤க்கு, ஷேன் வார்னுக்கு தரும் மரியாதையை வழங்கி கௌரவித்தது, பார்க்கக் கொடுமையாக இருந்தது ! எப்படி இருந்த சச்சின் இப்படி ஆயிட்டாரே என்ற பரிதாபமே மிஞ்சியது. கிட்டத்தட்ட 75 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அம்பயரே அவரது மட்டமான ஆட்டத்தைப் பார்க்கச் சகிக்காமல், அவருக்கு LBW கொடுத்து, அவரை களத்தை விட்டு வெளியேற்றியது சரி என்றே கூறுவேன் ;-)

4. 114-3 என்பதிலிருந்து 121-6 என்ற சரிவு ஏற்பட்டதற்கு சச்சினே பொறுப்பேற்க வேண்டும் ! இந்த டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தால் (அடைவது உறுதி என்றே நினைக்கிறேன்!) சச்சினே அதற்கு முக்கியக் காரணம் என்று திட்டவட்டமாகக் கூறுவேன்.

5. கங்குலி களத்தில் இருந்தவரை, நன்றாக விளையாடிய டிராவிட்டும், சச்சினின் அபத்த அணுகுமுறை அவரையும் தொற்றிக் கொண்டதால், சீனப் பெருஞ்சுவராகவே மாறி விட்டார் ! இறுதியில், அடிக்கப் போய், பந்து வீச்சாளர் ஹாரிஸ¤க்கு ஒரு மென்மையான return catch கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

6. லஷ்மணை ரன் அவுட் ஆக்கிய பெருமையும் சச்சினையே சாரும் ! தான் பந்தை எதிர்கொள்ள வேண்டுமே என்ற பயத்தில், இல்லாத இரண்டாவது ரன்னுக்கு, லஷ்மணை அழைத்து அவரை வீட்டுக்கு அனுப்பினார் !

7. நன்றாக மன உறுதியுடன் ஆடிய கங்குலி, முக்கியமான தருணத்தில், கவனம் சிதறி, கல்லியில் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ! அவர் சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்ததாகவே கருதுகிறேன்.

8. நமது சீனியர் வீரர்கள் தமிழ்நாட்டு இளஞ்சிங்கம் கார்த்திக்கிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன ! 2-வது இன்னிங்க்ஸில் மீண்டும் சிறப்பாக ஆடி, 48 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா, ஆட்ட நேர இறுதியில், 55-2 என்ற நிலைக்கு முன்னேறி இருந்தது. டெஸ்டின் கடைசி நாள் இன்னும் 155 ரன்கள் எடுக்க வேண்டும், எடுத்து வெற்றி பெற்று, 2-1 என்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். நமது பந்து வீச்சாளர்களாவது (முக்கியமாக அனில் கும்ப்ளே) கொஞ்சம் fighting spirit-ஐ காட்டுவார்களா ? அல்லது மழை வந்து இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றுமா ?

இப்போட்டியில் (ஒரு வேளை அதிசயமாக!) இந்தியா வெற்றி பெற்றாலும், சச்சினையும், சேவாக்கையும் சில மாதங்கள் (கங்குலியைப் போல) அணியிலிருந்து விலக்கி வைத்தல் நலம் பயக்கும் என்பது என் எண்ணம் !!! அவர்களுக்கு வேண்டிய வாய்ப்புகள் வழங்கியாகி விட்டது.

No one is indispensable and rules and policies are applicable to every one !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 276 ***

13 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As usual, my comment will be the first comment :)))

முத்துகுமரன் said...

Match delayed by rain - Day 5
www.cricinfo.com

:-)

said...

//அல்லது மழை வந்து இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றுமா ?//

காப்பாற்றி விட்டதே!

said...

வருணபகவானுக்கு கடகட்டு தந்தி அனுப்பி மழைய வரவழைச்சுட்டோமில்ல.. இருந்தாலும் ரெண்டு ரன் அவுட் அதுவும் டெஸ்ட் மேட்ச் லங்கறது பெரிய தண்டனைக்குறிய குற்றம். நம்ம "தெண்ட"ல்கர் ( இந்த ஆட்டத்தில மட்டும் ) ரொம்ப மோசம்.

இப்போதைய நிலவரப்படி.. ஆட்டம் மழை விட்டப் பின் போதிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே தொடரப்படும். ஹ்ம்ம்ம் இந்திய அணிக்கு வாழ்வு தான்

said...

சூப்பருங்கோ

enRenRum-anbudan.BALA said...

Muthu kumaran, anony 1, anony 2, kudiyAnavan,

varukaikku mikka nanRi !


VARUNA WAS NOT ABLE TO SAVE INDIA :)

said...

//இப்போட்டியில் (ஒரு வேளை அதிசயமாக!) இந்தியா வெற்றி பெற்றாலும், சச்சினையும், சேவாக்கையும் சில மாதங்கள் (கங்குலியைப் போல) அணியிலிருந்து விலக்கி வைத்தல் நலம் பயக்கும் என்பது என் எண்ணம் !!! அவர்களுக்கு வேண்டிய வாய்ப்புகள் வழங்கியாகி விட்டது.//

வஸீம் ஜாபரையும் கோச்சையும் விட்டு விட்டீர்களே?..

enRenRum-anbudan.BALA said...

இளவரசன்,
//வஸீம் ஜாபரையும் கோச்சையும் விட்டு விட்டீர்களே?..
//

What can the coach do if these IDIOTS don't listen to him and follow the decided strategy :(

Thanks for your visit !

said...

வேணும்னா கோச்ச சச்சினுக்கு பதிலா பேட்டிங் செய்ய அனுப்பலாம் :D

இம்மாம்பெரியா சச்சினாலேயே புடுங்கமுடியாதத வாஸிம் ஜாஃபர் புடுங்கணுமா? அவர்தான் முதல் இன்னிங்ஸ்லயாவது அடிச்சாரே! எப்படியும் அவர உக்கார வெச்சுருவாங்க.

அது என்னயா சச்சின் மட்டும் தெய்வமா? மீடியால ஒரு பயலாவது வாயத்தொறந்து எழுதுறானா? இர்ஃபான் பத்தான வீட்டுக்கு அனுப்பலாம், கங்குலிய அனுப்பலாம்னா சச்சினயும் சேவாக்கயும் ஏன் அனுப்பக்கூடாது? அவங்க இடத்த காலி பண்ணினா, நம்ம கார்த்திக்கோ வேறு ஒருவரோ நன்றாக ஆடி இடத்த புடிச்சிடுவாங்களோன்னு பயமா?

said...

Abul (abulfasal@mailglobal.net) wrote:

>
> அன்பின் பாலா
> நீங்கள் 4ஆம் நாள்
> மேட்சை ball by ball tvல்
> பார்த்தீங்களா?
> மேட்ச் தோத்துப்
> போனதுக்கு சச்சின்
> தான்
> முழுக்காரணம்னு
> நீங்க சொல்றத
> என்னால ஏத்துக்க
> முடியல....
>
> -அபுல்

enRenRum-anbudan.BALA said...

அபுல்,
//> நீங்கள் 4ஆம் நாள்
> மேட்சை ball by ball tvல்
> பார்த்தீங்களா?
//
இல்லை !

சச்சின் ஆடியதை
முழுதும்
பார்த்தேன்.
ஆட்டத்தின் டெம்போ,
அவர் மட்டை போடத்
தொடங்கியதில் தான்
எதிரணிக்குச்
சாதகமாகத்
திரும்பியது என்பது
என் கருத்து.
சாப்பலும் இதையே
தான்
கூறியிருக்கிறார் !!!
தாங்கள் நலம் தானே.

எ.அ.பாலா
********************

Anony,
Thanks !

said...

Good post ... Sachin needs a break ..

said...

பாத்தீங்களா? சேவாக் ரஞ்சில ஒரு டொக்கு டீம் பௌலிங்க செஞ்சுரி போட்ட்தும் 'sehwag back to form with a bang' அப்படீன்னு தலைப்பு போட்டுட்டானுங்க? 4 நாள் முன்னால்வரை தென் ஆப்பிரிக்காவில் தடவியவருக்கு இது சரியா?

ஆரம்பிச்சுடாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails